2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தளவாய் கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 15 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சுனாமியால் பாதிக்கப்பட்ட தளவாய் கரையோர சமுதாய மக்களுக்காக இதுவரையில் தலா 13 இலட்ச ரூபாய் செலவில் 49 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ரீ.மயூரன் தெரிவித்தார்.

சுனாமி இடம்பெற்று பத்தாண்டு நிறைவை முன்னிட்டு நிகழ்வு  ஏறாவூர் தளவாய் கிராமத்தில்  ஞாயிற்றுக்கிழமை (14) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,

'சுனாமித் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட தளவாய் கரையோர சமுதாய மக்களுக்காக வீடமைப்புத் திட்டமும் முழுமையான சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களும் 2006ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தளவாய்க் கிராம மக்களின் வாழ்வாதார திட்டங்களுக்காக 2008ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 15 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ராஜதுரைநகர், களுவன்கேணி, கற்பக்கேணி, கரடிப்பூவல், மண்டாம்பக்கேணி, பத்தரைக்கட்டு, நெடுங்கேணி, குசலானமலை மற்றும் வவுணதீவு ஆகிய கிராமங்களில் 118 நிரந்தர வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த உதவித்திட்டங்களை இயற்கை மற்றும் செயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
சுனாமி ஒரு புறம் அழிவை ஏற்படுத்தினாலும் மறுபுறம் ஆக்கபூர்வ செயற்பாடுகளுக்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி விட்டுச் சென்றது'  என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X