2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தீர்வை அற்ற மோட்டார் சைக்கிள்கள் வழங்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 17 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரையிலும் தீர்வை அற்ற மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவில்லை என்றும் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும்  காத்தான்குடி பிரதேசத்தில் கடமை புரியும் திவிநெகும முகாமையாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள்; கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத்; தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை  காத்தான்குடியிலுள்ள அவரது அலுவலகத்தில்  செவ்வாய்க்கிழமை (16) மாலை சந்தித்து இந்தக் கோரிக்கையை விடுத்தனர்.

இந்த நிலையில், அமைச்சின் செயலாளருடன் தான் கலந்துரையாடி விரைவாக மோட்டார் சைக்கிள்களை  பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி  மஹிந்த ராஐபக்ஷ நிச்சயம் வெற்றியீட்டுவார். ஐனாதிபதியானதும் பல்வேறு வேலைத்திட்டங்கள் பாரிய அபிவிருத்தித்திட்டங்கள் இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார். 

திவிநெகும உத்தியோகஸ்தர்களாகிய நீங்கள், திணைக்களத்தில் உள்வாங்கப்பட்டுள்ளீர்கள். மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கவும் வறுமையை போக்கவும் மேலும் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கு நீங்கள் பூரண ஒத்துழைப்பு நல்கவேண்டும் எனவும் அவர் கூறினார்.

இதன்போது காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவுகளிலுள்ள திவிநெகு திணைக்களத்தின் முகாமையாளர்கள், அதன் உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X