2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'அமீர் அலி முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்துள்ளார்'

Kanagaraj   / 2014 டிசெம்பர் 24 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

முன்னாள் அமைச்சர் அமீர் அலி முழு முஸ்லிம் சமூகத்தையும் காட்டிக்கொடுத்துவிட்டார் என்று  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை (23) மாலை  நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே, அவர்  மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'புனிதமான இஸ்லாம் மார்க்கத்தில் பிறந்த முஸ்லிம்களை அந்நிய சமூகங்கள் தவறாக பார்க்கும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தனது பதவியை இராஜினாமாச் செய்து அமீர் அலியை  நாடாளுமன்ற உறுப்பினராக  ஆக்கினார்.

ஜனாதிபதி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் எடுத்துக்கொண்டு எதிரணிக்குச் சென்றுவிட்டார். அவர் எதிரணிக்குப் போகலாம். அது அவரது சொந்த விடயம். ஆனால், அவர் நாகரிகமுள்ள ஒருவராக இருந்தால், நாடாளுமன்ற  உறுப்பினர் பதவியை  எடுத்திருக்கக்கூடாது அல்லது எடுத்த பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு சென்றிருக்வேண்டும். அவரது இந்த அநாகரிகமான இந்தச் செயல் தலைகுனிய வைக்கும் செயலாகும்' என்றார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X