2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வாவி பெருக்கெடுத்ததால் மக்கள் இடம்பெயர்வு

Thipaan   / 2014 டிசெம்பர் 27 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும்மழை காரணமாக காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் வாவி நீர் பெருக்கு எடுத்துள்ளது. இதனால் வாவியை அண்மிதத பகுதிகளிலுள்ள மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.

வாவியை அண்மித்த வீடுகள் மற்றும் வீதிகளில் வெள்ள  நீர் பெருக்கெடுத்துள்ளதால் பொதுமக்கள் இடம் பெயர்ந்து வருவதுடன் வாவியில் மீன்பிடியில் ஈடுபடும் மீன் பிடி தொழிலாளர்களின வாழ்வதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 3,000 குடும்பங்களைச் சேர்ந்த 11,721 பேர் இடம் பெயர்ந்து உறவனிர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தெரிவித்தார்.

காததான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 9,854 குடும்பங்களைச் சேர்ந்த 35,921 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X