2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இந்த அரசாங்கத்தால் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது: ராஜித

Gavitha   / 2014 டிசெம்பர் 29 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா


கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு இந்த அரசாங்கம் கடும் அநீதிகளை இழைத்து வந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜித சேனாரத்தின தெரிவித்தார்.

காத்தான்குடியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாட்டில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசோனவை ஆதரித்து திங்கட்கிழமை (29) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மாற்றத்துக்கான இந்த பாரிய வேலைத்திட்டத்தில் முஸ்லிம்கள் சார்பில் இணைந்து கொண்ட முதலாவது தரப்பாக, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியே உள்ளது. தற்போது இந்த வேலைத்திட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் எம்மோடு இணைந்துள்ளார்கள்.

எனது பேருவலைத் தொகுதி முஸ்லிம்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் இந்த அரசாங்கத்தோடு, ஜனாதிபதியோடு பிரச்சினைப்பட்டுக்கொள்வது, வாக்கு வங்கிகளை அதிகரித்துக் கொள்வதற்காக இனவாதத்தை, மதவாதத்தைத் தூண்டும் இந்த செயல்கள் பற்றித்தான்.

இந்நாட்டு வரலாற்றில் உருவாகாத இன, மத வேறுபாடுகள், வன்முறைகள் இந்த ஜனாதிபதியின் ஆட்சியில்தான் ஏற்படுத்தப்பட்டது. அப்படியென்றால், ஒரு முஸ்லிம் அல்லது தமிழ் மகன் இந்த அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் வாக்களிப்பதென்றால், அது முழுக்க முழுக்க தன்னுடைய சுய இலாபத்துக்காகத்தான்.

இந்த நாட்டுக்காகவோ, இனத்துக்காகவோ, தன்னுடைய சமூகத்துக்காகவோ அல்ல. நாங்கள் ஆரம்பித்து இருக்கின்ற இந்தப் பயணத்தில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்று அவர் ஆட்சி செய்கின்றபோது இந்த இந்த நாட்டிலே இன, மத, மொழி வேறுபாடற்று, எல்லோரும் ஐக்கியமாக வாழக்கூடிய, ஒவ்வொரு இனத்தவரும் தன்னுடைய அடையாளத்தையும் தனித்துவத்தையும் சுதந்திரமாகப் பேணக்கூடிய, நல்லதொரு நிலைமையை நாம் ஏற்படுத்துவோம்.

எனவே, எதிர்வரும் 8ஆம் திகதி அன்னச் சின்னத்துக்கு வாக்களித்து மைத்திரியை வெற்றிபெறச் செய்வோம். அன்னச் சின்னத்தின் வெற்றி உங்களின் வெற்றி எனக் கூறிக்கொள்ள விரும்புவதோடு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் வெறிபெற வேண்டும் என வாழ்த்துகிறன்.' என குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X