2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'அரச உத்தியோகஸ்தர்கள் பக்க சார்பின்றி கடமையாற்ற வேண்டும்'

Gavitha   / 2015 ஜனவரி 01 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
,எஸ். பாக்கியநாதன்

மக்களின் வரிப்பணத்திலிருந்து ஊதியம் பெறும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மக்களுக்கு பக்க சார்பின்றி கடமையாற்ற வேண்டும் என்று காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தெரிவித்தார்.

புதிய ஆண்டின் முதல் தினமான  இன்று (01) அரச உத்தியோகஸ்தர்கள் கடமை பொறுப்பேற்கும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்று போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசாங்க உத்தியேகாஸ்தர்கள் பொதுமக்களுக்கு தம்மால் முடியுமான அனைத்து சேவைகளையும் வழங்க வேண்டும்.
மக்களின் வரிப்பணத்திலிருந்து நாம் சம்பளம் பெறுகின்றோம். அந்த வகையில் நம்மை நாடி வரும் பொதுமக்களின் தேவைகளை முடியுமான வரை செய்து கொடுக்க வேண்டும்.

அர்ப்பணிப்புடன் பொறுப்புணர்ச்சியுடன் சேவையாற்ற வேண்டும்.

அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு அரசியல் செய்வதற்கு உரிமையுண்டு. ஆனால், அந்த உத்தியோகஸ்தர்கள் தான் சார்ந்த அரச நிறுவனத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்யக் கூடாது.

கடந்த ஆண்டில் இப்பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பதவி நிலை உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகஸ்தர்கள், அனர்த்த நேரங்களில் சிறப்பாக செயற்பட்ட உத்தியோகஸ்தர்கள், கிராம உத்தியோகஸ்தர்கள், வாழ்வின் எழுச்சி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை சிறப்பாக மேற் கொண்ட உத்தியோகஸ்தர்கள் என அனைத்து உத்தியோகஸ்தர்களுக்கும் நன்றி கூறுகின்றேன் என்று தெரிவித்தார்.

இவ்வைபவத்தில், உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.கருணாகரன், நிருவாக உத்தியோகஸ்தர் எஸ்.சுந்தரராஜன், கிராம உத்தியோகஸ்தர்களுக்கான நிர்வாக உத்தியோகஸ்தர் ஏ.கோமலேஸ்வரன், கணக்காளர் எஸ்.ரூபகரன் உட்பட அதிகாரிகள் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, காத்தான்குடி பிரதேசத்தில் கலாசார கண்காட்சியினை சிறப்பாக நடாத்த அதிக ஒத்துழைப்புக்களை வழங்கிய இரண்டு உத்தியோகஸ்தர்கள், நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X