2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாணசபையால் தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்: இரா.துரைரெத்தினம்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 12 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்  

கிழக்கு மாகாணசபையினால் தமிழ் மக்கள் பல வகைகளில் ஓரங்கட்டப்பட்டு,  தூக்கி வீசப்பட்டுள்ளார்கள். இது தொடர்பில் மூன்று தடவைகள் கிழக்கு மாகாண சபையில் உறுப்பினராக இருந்த தனக்கு நன்கு தெரியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் ஞாயிற்றுக்கிழமை (11)  நடத்திய வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,   

'கிழக்கு மாகாகணசபையினால் வழங்கப்படுகின்ற அரச நியமனங்களில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். அதிகாரிகள் மட்டத்தில் வகிக்கின்ற பதவி நிலைகளில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். காணி மற்றும் ஏனைய அபிவிருத்திகள், நிதி ஒதுக்கீடுகள் என பலவாறாக தமிழ் மக்களை கிழக்கு மாகாணசபை புறந்தள்ளியுள்ளது.

இவை அனைத்தையும்; கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் ஆட்சி மாற்றத்தினூடாக தமிழ் மக்களுக்கு ஏற்ற நடைமுறைக்குச் சாத்தியமான எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஈடுசெய்யக்கூடிய அளவுக்கு நியமனங்கள், அபிவிருத்திகள் போன்றவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறை செலுத்தி செயற்படும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X