2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

சிறுபோகச் செய்கைக்கான கூட்டம் 26இலிருந்து ஆரம்பம்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக பயிர்ச்செய்கைக்கான ஆரம்பக்கூட்டங்கள் இம்மாதம் 26ஆம் திகதி முதல் மார்ச் 3ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று - நவகிரி, தும்பங்கேணி, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான ஆரம்பக்கூட்டம் 26ஆம் திகதி காலை 9.30 மணிக்கு வெல்லாவெளி பிரதேச செயலகத்திலும்; மண்முனை தெற்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கடுக்காமுனை, புழுக்குணாவை, அடைச்சகல், சிறிய நீர்ப்பாசனத்திட்டத்துக்கான கூட்டம் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் மாலை 2.30 மணிக்கும் நடைபெறும்.

மண்முனை மேற்கு -வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவின் உன்னிச்சை, சிறு நீர்ப்பாசனத்திட்டங்களுக்கு 27ஆம் திகதி காலை 9.30 மணிக்கு வணவுதீவு பிரதேச செயலகத்தில் நடைபெறும். அதேநேரம், உறுகாமம், கித்துள்வௌ, வெலிக்காகண்டி, சிறு நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டம் 2.30 மணிக்கு ஏறாவூர்ப்பற்று பிரசேத செயலகத்தில்; நடைபெறும்.  

28ஆம் திகதி கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப்பிரிவின் வாகனேரி, புணானை, தரவை, வடமுனை, சிறிய நீரப்பாசனத்திட்டங்களுக்கான ஆரம்பக்கூட்டம் கோரகல்லி மடு றெஜி கலாசார மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறும்.

கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் கட்டுமுறிவு சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள், மதுரங்கேணி, கிரிமிச்சை சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான ஆரம்பக்கூட்டம் வாகரை பிரதேச செயலகத்தில் காலை 9.30 மணிக்கும் நடைபெறும் என்று மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .