2025 மே 19, திங்கட்கிழமை

'தங்கி வாழ்வதால் முன்னேற்றம் இல்லை'

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தொடர்ந்து நிறுவனங்களில் தங்கி வாழும் நிலையை  கொண்டிருப்போமானால்,  அந்த சமூகம் ஒருபோதும் வளர்ச்சியடையப் போவதில்லை என்று  மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் தெரிவித்தார்.
'பெண்களின் உயர்வு சமூகத்தின் உயர்வு'  என்ற தலைப்பில் மாபெரும் எழுச்சி நிகழ்வு,  வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரடியனாறில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'அரச நிறுவனம் என்றாலும் சரி, அரசசார்பற்ற நிறுவனம் வழங்கும் உதவிகள் உங்களை வலுப்படுத்துவதற்கான ஆரம்ப உதவியாகவே தரும். தொடர்ந்து நிறுவனங்களில் தங்கி வாழும் நிலையை நாங்கள் கொண்டிருப்போமானால்,  எமது சமூகம் ஒருபோதும் வளர்ச்சியடையப்போவதில்லை.

நாங்கள் முன்னேறுவதற்கு மனதில் தன்னம்பிக்கை மிகவும் அவசியமானது.  தன்னம்பிக்கை இருந்தால்;,  பல சாதனைகளை எங்களால் படைக்கமுடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தை  பொறுத்தவரையில் அனைத்து வளங்களும் இங்கு உள்ளன. ஆனால் சோம்பேறித்தனம்,  சரியாக முயற்சி இன்மை,  அனைத்துக்கும்  மற்றவர்களிடம் தங்கியிருக்கின்றமை  ஆகியவை காரணமாக எம்மால் முன்னேற்றகரமான நிலைக்கு செல்லமுடியாமலுள்ளது.

நீங்கள் வலுப்படுத்தப்பட்ட பெண்கள். வலுப்படுத்தப்பட்ட சமூக அமைப்புகள். சமூகத்தில் காணப்படும் பிழையான விடயங்களை முறியடித்து, பிரதேசத்தையும் சமூகத்தையும்; மாவட்டத்தையும்; முன்னேற்றுவதற்கு காத்திரமான பங்களிப்பை  வழங்கவேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X