2025 மே 19, திங்கட்கிழமை

மகளிர் சம்மேளன நிர்வாகிகள் தெரிவு

Kogilavani   / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சம்மேளன நிர்வாகிகள் தெரிவும்; பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைக்கும் புத்தக வெளியீடும் வியாழக்கிழமை(10) பகல் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

உதவிமாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 'இன்றைய நோக்கம்' என்ற தலைப்பில் பெண்களின் செயற்பாட்டு முக்கியத்துவம் குறித்துக் கருத்துத்தெரிவித்தார்.

மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அருணாளினி சந்திரசேகரத்தின் வரவேற்புரை, மகா மகளிர் சம்மேளனங்களி; எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் எஸ்.சொர்ணலிங்கம் ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது,

இதன் தலைவராக திருமதி ச.தியாகலிங்கம் ஆரையம்பதி, செயலாளரா திருமதி ர.லதா பட்டிப்பளை, உபதலைவராக ஆ.டு.நாஸறா  காத்தான்குடி, பொருளாளராக  க.ஜெமிலா ஓட்டமாவடி, உபசெயலாளராக ர.குணேஷ்வரி வெல்லாவெளி ஆகியோரும் உறுப்பினர்களாக க.வதனி, சி.அருந்ததி, எம்.எல்.நுபைதா, லோ.ஜெயந்தி, க.ஜெயந்தி, ஆ.ஐ.சித்தி நைமா, எஸ்.புஸ்பராணி, கே.வசந்தராணி, எம்.நிசாந்திணி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X