Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
செரிபரல் பால்சி குழந்தைகளுக்கான விசேட சக்கர கதிரைகள் இலவசமாக வழங்கும் முகாம் எதிர்வரும் 12ஆம் திகதி, மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
குழந்தைகள் அமர்ந்திருப்பதில், பேசுவதில், நிற்பதில் அல்லது நடப்பதில் தாமதம் அல்லது இயலாமை இருப்பின், அது செரிபரல் பால்சியாக இருக்கலாம்.
இந்த இலவச முகாமில் 03 வயது தொடக்கம் 18 வயது வரையிலான அனைவரும் பங்குபற்றி ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான கண் மற்றும் பற்கள் என்பனவும் பரிசோதிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்.
அன்றையதினம் காலை 08.00 மணி தொடக்கம் இடம்பெறவுள்ள இச்சிகிச்சை முகாமில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிரதேசங்களில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு பயனைடய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணம் தழுவியதாக இந்த முகாம் மட்டக்களப்பில் மாத்திரம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிகிச்சை முகாம் லடர் ஒப் ஹோப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் செரிபரல் பால்சி லங்கா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago