2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விருதளிப்பு விழா

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் சமூக மேம்பாட்டு மையம் நடாத்திய விருதளிப்பு விழா சனிக்கிழமை (11) மட்.குருக்கள்மடம் கலைவாளி மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் கே.ஞானரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன் மற்றும் பட்டிருப்பு, மட்டக்களப்பு மேற்கு, கல்குடா, மட்டக்களப்பு, ஆகிய கல்வி வலயங்களின் பணிப்பாளர்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றேர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது 2014ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சை, உயர்தரப்பரீட்சை போன்றவற்றில் திறமைச் சித்தியெய்திய 81 மாணவர்களுக்கு பரிசில்களும் ஞாபகச் சின்னங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது, பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X