2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பசுமாடுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

George   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்குமாகாண விவசாய கால்டை அமைச்சின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை சித்தாண்டி ஆகிய பிரதேசங்ளைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பசுமாடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு, வந்தாறுமூலை கால் நடை வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கால்நடை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தலைமையில் சனிக்கிழமை(11)இடம்பெற்றது.

பிரதம அதிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் கலந்துகொண்டார்.

இதன் போது கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்குமாகாண பணிப்பாளர் மற்றும் கால் நடைவைத்தியர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X