Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் 180 நாட்கள் தற்காலிக மற்றும் அமைய தொண்டர் அடிப்படையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கமநல அபிவிருத்தி அமைச்சு நிரந்தர நியமனங்களை வழங்கியுள்ளது.
41 ஊழியர்கள் நிரந்தர நியமனங்களை நேற்று புதன்கிழமை பெற்றுக்கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் அதன் மாவட்ட பிரதி ஆணையாளர் கே.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்டத்தின் 17 விவசாய போதனாசிரியர் பிரிவுகளையும் சேர்ந்த அதிகாரிகள், மாவட்ட உதவி ஆணையாளர் உட்பட கமநல சேவைகள திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
விற்பனை எழுதுநர், பண்ணை உதவியாளர், காவலாளி ஆகிய பதவிகளுக்கு நிரந்த நியமனங்கள் இதன்போது வழங்கப்பட்டன.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago