2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'வரி செலுத்துபவர்கள் அபிவிருத்தியில் பங்காளிகள் ஆகின்றனர்'

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

வரி செலுத்துபவர்கள் நாட்டின் அபிவிருத்தியில் பங்காளிகளாக மாறுகின்றனர் என்று உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிராந்திய ஆணையாளர் எம்.கணேசராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலிருந்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு  சிறப்பாக வரி செலுத்திவரும் 17 பேருக்கு சிறப்புரிமை அட்டைகள் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'வரி செலுத்துபவர்கள் தாம் நிலையான தர்மத்தை  வழங்குகின்றனர். வரி செலுத்துபவர்களின் வரிப்பணம் இந்த நாட்டின் அபிவிருத்திக்காக செலவு செய்யப்படுகின்றது. கல்வி, சுகாதாரம், பொதுநல சேவைகள் என இந்த நாட்டில் பல்வேறு அபிவிருத்திகளுக்காக செலவு செய்யப்பட்டு வருகின்றது.
வரி செலுத்துபவர்கள் இதை ஒரு பெரிய சுமையாக கருத வேண்டியதில்லை. வரியை  முறையாக உரிய

தவணைக்காலத்தில் செலுத்துபவர்கள் பல்வேறு நன்மைகளை பெறுகின்றனர். அதில் ஒன்று வரியை சிறப்பாக செலுத்திய 19 பேருக்கு சிறப்புரிமை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 19 பேரில் 7 பேருக்கு தங்க சிறப்புரிமை அட்டைகளும்  ஏனைய 12 பேருக்கு சில்வர் சிறப்புரிமை அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்புரிமை அட்டைகளை  பெறுகின்றவர்கள் பல முன்னுரிமையிலான நன்மைகளை பெறமுடியும். இந்த சிறப்புரிமை அட்டைகளை  வைத்திருப்பவர்கள் அரச திணைக்களங்களில், அரச வைத்தியசாலைகளில், அரச வங்கிகளில், விமான நிலையத்தில், இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் என இந்த இடங்களில் எல்லாம் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X