2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 19 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றக் கிராமமான அல் மஜிமா கிழக்கு கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை கட்டுத்துவக்கு ஒன்றை  கைப்பற்றியதுடன், சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்ததாக   வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி கிராமத்தில்  வழமைக்கு மாறாக துப்பாக்கி வெடிப்புச் சத்தம்  கேட்டுள்ளது. இது தொடர்பில் அச்சமடைந்த  பொதுமக்கள்,  தங்களுக்கு  தகவல் வழங்கியுள்ளனர். இதனை அடுத்து  சம்பவ இடத்துக்கு தாம் சென்றதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த நிலையில்  தென்னந்தோட்டமொன்றில் காணப்பட்ட   காவல் குடிசையிலிருந்து மேற்படி கட்டுத்துவக்கு கைப்பற்றப்பட்டது. அக்காவல் குடிசையிலிருந்த சந்தேக நபர் தலைமறைவாகியிருந்தபோது, அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த சந்தேக நபர் அத்தென்னந்தோட்டத்தில் தலைமறைவாகியிருந்தபோது கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .