2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சத்தியசாய்பாபாவின் நினைவு தினத்தையொட்டி விசேட நிகழ்வு

Kogilavani   / 2015 ஏப்ரல் 19 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

சத்தியசாய்பாபாவின் 4ஆவது நினைவு தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

அற்புதங்கள் புரிந்து மக்களை நல்வழிப்படுத்திய மகானாக போற்றப்படும் சத்தியசாயிபாபா 2011ஆம் ஆண்டு சித்திரை மாதம் 19ஆம் திகதி சமாதியடைந்தார்.

மட்டக்களப்பு, தாமரைக்கேணி சாய் சமித்தியில் அதன் தலைவர் எஸ்.சாமித்தம்பி தலைமையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு நகரில் இருந்து மாபெரும் ஊர்வலம் இடம்பெற்றது. பகவான் சத்தியசாயிபாபாவின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி முன்செல்ல இந்த ஊர்வலம் நடைபெற்றது.

சாயி சேவா சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ரி.லோகிதகுமார் உட்பட சாயி நிலையங்களின் தலைவர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X