Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 19 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு றொட்டறிக் கழகத்தின் 55 அவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் பயனியர் வீதியில் அமைந்துள்ள அதன் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (18) மாலை இடம்பெற்றது.
றொட்டறிக் கழகத்தின் நடப்பு வருடத்துக்கான தலைவர் றொட்டறியன் டொமிங்கோ ஜோர்ஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு, அம்பாறை மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
றொட்டறியன்களின் சத்தியப்பிரமாணம், 55 ஆவது ஆண்டு நினைவு மலர் வெளியீடு, போல் ஹரிஸ் பட்டம் பெற்றவர்களின் அறிமுகம் என்பன இடம்பெற்றன.
சர்வதேச றொட்டறி பவுண்டேசனுக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் கொடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவிய பிரதான நன்கொடையாளரான றொட்டறியன் வினோபா இந்திரன் மற்றும் தொழில் பயிற்சி வழங்கியதுக்கான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் றொட்டறியன் எம்.ரவீந்திரனுக்கு மேன்மை விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.
இதன்போது ஆயர்கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் 1000 அமெரிக்க டொலர்கள் சர்வதேச றோட்டறி பவுண்டேசனுக்கு வழங்கியமைக்காக 27 றொட்டறியன்களுக்கு போல் ஹரிஸ் அங்கீகாரம் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு, கல்முனை மாவட்டங்களிலுள்ள றொட்டறியன்களின் குடும்பத்தினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
3 hours ago
3 hours ago