2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடி மீடியா போரத்தின் புதிய தலைவர் நியமனம்

Gavitha   / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி மீடியா போரத்தின் புதிய தலைவராக ஏ.எல்.டீன் பைறூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி மீடியா போரத்தின் இவ்வாண்டுக்கான பொதுச்சபைக் கூட்டம் சனிக்கிழமை (25) முன்னாள் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா தலைமையில் நடைபெற்ற போதே, புதிய தலைவராக இவர்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

போரத்தின் நிருவாக உறுப்பினர்கள் பொதுச்சபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், காத்தான்குடி மீடியா போரத்தின் யாப்பு திருத்தம் செய்யப்பட்டு, அது சபையோரால்  அங்கிகரிக்கப்பட்டது.

இதன்போது இடம்பெற்ற புதிய நிர்வாக சபை தெரிவில், புதிய தலைவராக ஏ.எல்.டீன் பைறூஸ், செயலாளராக எம்.எச்.எம்.அன்வர்,  பொருளாளராக எஸ்.ஏ.கே.பழீலுர் றஹ்மான், உப தலைவராக மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா, உப செயலாளராக எம்.ஏ.நசார், தகவல் பணிப்பாளராக எம்.ஐ.எம்.கமால்டீன், நிர்வாக சபை உறுப்பினர்களாக எம்.எப்.எம்.பசால், யு.எல்.எம்.சபீக், எம்.எஸ்.எம்.சஜி, ஏ.எம்.சாதிக், எம்.எஸ்.எம்.நூர்தீன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X