2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 மே 02 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல், எம்.எஸ்.எம்.நூர்தீன்

கனவு காண்பதற்கல்ல வழியைக் காட்டுவதற்கு எனும் இளைஞர் அபிவிருத்தி அமைப்பின் வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 430 இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு இந்து கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (02) நடைபெற்றது.

கனவு காண்பதற்கல்ல வழியைக் காட்டுவதற்கு எனும் தொனிப் பொருளில் நாடுபூராவும் இவ்வேலைத்திட்டத்தின் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த வேலைத் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில்; வாழைச்சேனை, களுவாஞ்சிகுடி ஆகிய இடங்களில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளன.

இதன்போது இளைஞர் பயிற்சி காட்சிக் கூடங்கள் மற்றும் தொழில் வழிகாட்டல் காட்சி கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் இளைஞர் கழக அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன் போது விளக்கமளிக்கப்பட்டன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தலைமையில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.சுபைர், பொறியியலாளர் சிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி திருமதி நிசாந்தி அருள்மொழி, இளைஞர் சேவை அதிகாரிகள், மாவட்ட இளைஞர் சம்மேளன உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .