2025 ஜூலை 09, புதன்கிழமை

திருட்டில் ஈடுபட்டவர் கைது

Suganthini Ratnam   / 2015 மே 06 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனையில்  நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கைதுசெய்ததுடன், திருடப்பட்ட பொருட்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

06 மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்ட 44 கைப்பேசிகள், 1 கணினி, 1 மடிக்கணினி  உட்பட சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கைபற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரின் வீட்டில் திருடப்பட்ட அனைத்துப் பொருட்களும் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததாக  விசாரணையில்; தெரியவந்தது. இதைத் தொடர்ந்து திருடப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கடந்த நவம்பர் மாதம் 20ஆம் திகதி செங்கலடியிலுள்ள கைப்பேசிக் கடையொன்றிலிருந்து சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் திருடப்பட்டிருந்தன.

இது தொடர்பாக தொடர்ந்து  புலனாய்வு செய்துவந்த பொலிஸார், சந்தேக நபரை கைதுசெய்தனர்.

இவரிடம் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .