2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மீள் சுழற்சிமுறையில் திண்மக்கழிவகற்றல் திட்டம்

Kogilavani   / 2015 மே 15 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி, அப்துல் லத்தீப் சின்னலெவ்வை மாவத்தையில் வியாழக்கிழமை(15) மாலை, மீள் சுழற்சிமுறையில் திண்மக்கழிவகற்றல் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவினால் இந்நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி நகரசபை பிரிவில் நீண்டகால பிரச்சினையாக காணப்பட்ட குப்பைப் பிரச்சினைக்கான(திண்மக்கழிவு) பெரும்பாலான தீர்வு இன்று கிடைத்துள்ளதாக காத்தான்குடிநகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்
இந்நிகழ்வில், யுனெப்ஸ் நிறுவனத்தின் அதிகாரி எஸ்.சிவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் கருத்து தெரிவிக்கையில்  
'பிலிசறு மற்றும் யுனெப்ஸ் நிறுவனங்களின் அனுசரணை மற்றும் நெறிப்படுத்தலின் கீழ் அமைந்துள்ள இத்திட்டத்தின் ஊடாக உக்குகின்ற குப்பைகள் மீள் சுழற்சிக்குட்;படுத்தப்படுவதுடன் அவற்றை பசளையாக்கி விற்பனை செய்யமுடியும்.
இப்பசளை ஒருகிலோ 12.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றதுடன் ஒருநாளைக்கு 25 கிலோகிராம் கொண்ட 40 பேக்குகள் தயாரிக்கப்படுகின்றன.

காத்தான்குடி பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், தனவந்தர்களின் முயற்சியில் பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட நிதியை கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது' என மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .