2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பிறைம் கிராமின் நிதி நிறுவன கிளை திறந்து வைப்பு

Thipaan   / 2015 மே 16 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

ஹட்டன் நசனல் வங்கியின் இணை நிறுவனமான பிறைம் கிராமின் நிதி நிறுவனத்தின் மட்டக்களப்பு  கிளை, புதிய கட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (15)  காலை திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு கிளை முகாமையாளர் எஸ்.கிரிசாந்த் தலைமையில் நடைபெற்ற இத் திறப்பு விழாவில், பிறைம் கிராமின் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரும் முகாமைத்துவப்பணிப்பாளருமான சமிந்த பிரபாத், பணிப்பாளர் திருமதி கிரிசாந்தி தம்பையா ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு கிளையைத் திறந்து வைத்தனர்.

அத்துடன், மட்டக்களப்பு ஹட்டன் நசனல் வங்கிக்கிளை முகாமையாளர் வி.ரமணதாச, செலான் வங்கியின் உதவி முகாமையாளர், ஏனைய வங்கிகளின் பிரதிநிதிகள், வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.

இக்கிளைத் திறப்பு விழாவின் போது, வங்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், சிறுவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

2013ஆம் ஆண்டு நவம்பர் முதல் மட்டக்களப்பில் இயங்கிவரும் பிறைம் கிராமின் நிறுவனம் அவசர பணத் தேவைகளின் போது பணம் வழங்கல், நிலையான வைப்புக்கள், சேமிப்புக் கணக்குகள், குழந்தைகளுக்கான கணக்குகள் பேணுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .