2025 மே 17, சனிக்கிழமை

கஞ்சாச்செடிகளை வளர்த்தவர் கைது

Suganthini Ratnam   / 2015 மே 18 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தென்னங்கன்றுகளுடன் சேர்த்து கஞ்சாச் செடிகளை  வளர்த்துவந்ததாகக் கூறப்படும் 26 வயதுடைய  காவலாளி ஒருவரை ஏறாவூர், ஸக்காத் கிராமத்தில் இன்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

ஸக்காத் கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் அத்தோப்பு உரிமையாளருக்கு தெரியாதவண்ணம்  இந்தக் காவலாளி கஞ்சாச் செடிகளை வளர்த்துவந்துள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்தச் சந்தேக நபர் ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .