2025 மே 17, சனிக்கிழமை

ஆற்றில் நீராடச்சென்றவர் நீரில் மூழ்கி பலி

Gavitha   / 2015 மே 18 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாழைச்சேனை 04ஆம் வட்டாரத்திலுள்ள ஆற்றில் நீராடிய இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் திங்கட்கிழமை (18) நடைபெற்றுள்ளது.

கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவில் முஹம்மதியா வீதியைச் சேர்ந்த பின்ஹூஸைன் முஹம்மது முஹ்ஷின் (வயது - 18) என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

திங்கட்கிழமை மாலை 04.00 மணியளவில் வீட்டில் இருந்து குளிப்பதற்காக ஆற்றுக்குச் சென்ற இளைஞர் நீராடிக்கொண்டிருக்கும் போது சத்தமிட்டதாகவும் அந்த சத்தம் கேட்டு கரையில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றுவற்காக சென்றபோதும் அவரது சடலத்தையே மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,  இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .