2025 மே 17, சனிக்கிழமை

பிரதேச செயலக உத்தியோகஸ்தர் மீதான தாக்குதலை கண்டித்து பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2015 மே 20 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்

கிழக்கு பல்கலைக்கழத்தில் கடந்த சனிக்கிழமை (16)  நடைபெற்ற கண்காட்சியின்போது, தமிழில் தேசியகீதம் இசைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பல்கலைக்கழகத்தில் கற்கும் பெரும்பான்மையின மாணவர்களால் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக உத்தியோகஸ்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து நாம் திராவிடர் கட்சி எதிர்வரும் 22ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய ரீதியில் பூரண பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுமாறு  மாவட்டத்திலுள்ள அனைத்து அரச, அரசசார்பற்ற உத்தியோகஸ்தர்களுக்கும் வேண்டுகோள் விடுப்பதாக  அக்கட்சியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல்  கண்டிக்கப்படவேண்டும். எனவே,  இந்தத் தாக்குதலை கண்டித்து முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்புக்கு மாவட்டத்திலுள்ள அனைத்து வியாபார நிலையங்களையும் மூடி  ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .