2025 மே 17, சனிக்கிழமை

பொதுப்பணம் வீணடிக்கப்படுவதை தவிர்க்கவேண்டும்

Suganthini Ratnam   / 2015 மே 21 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பொதுப்பணம் வீணடிக்கப்படுகின்ற அரசியல் கலாசாரத்தை துடைத்தெறிந்து மக்களுடைய பணத்தின் பெறுமதியை  உணர்ந்து செயற்படவேண்டியது எம்மீதுள்ள கடமை என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

காத்தான்குடி  பொது மைதானத்தை நேற்று புதன்கிழமை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்காக மேடை அமைத்து காத்தான்குடி பொதுமைதானம் பள்ளமும் படுகுழியுமாக காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த மைதானத்தை சீர்செய்து தருமாறு விளையாட்டுக்கழகங்கள் கேட்டமைக்கு  இணங்க மைதானத்தை அவர் பார்வையிட்டதுடன்,  இதை  சீர்செய்வதற்குரிய மதிப்பீட்டை மேற்கொள்ளுமாறு கோரி காத்தான்குடி நகரசபைக்கு  அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டை பெறுவதனூடாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் அனுமதியை பெற்று இதனை சீர்செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .