2025 மே 17, சனிக்கிழமை

கிழக்கு பல்கலையின் விளையாட்டரங்குகளுக்கு காபட் இடும் பணி ஆரம்பம்

Gavitha   / 2015 மே 21 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள வீதிகள் மற்றும் டெனிஸ் விளையாட்டரங்குகள் காபட் இடும் பணிகள் புதன்கிழமை (20)  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கிழக்கு பல்கலைக்கழகம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த காபட் இடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாhர சபையின் நிறைவேற்றுப்பொறியியலாளர் நா.சசிநந்தன் தெரிவித்தார்.

இதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஒரு கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் பொறியிலாளர் தெரிவித்தார்.
இதன்போது, கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள உள்ளக வீதிகள் அனைத்தும் காபட் இடப்பட்டுவருவதாகவும் அத்துடன் டெனிஸ் விளையாடும் பகுதியும் காபட் இடப்பட்டுள்ளதாகவும் நிறைவேற்றுப் பொறியியலாளர் நா.சசிநந்தன் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுவந்ததாகவும் ஆனால் தற்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையே அவற்றினை மேற்கொண்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .