Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Gavitha / 2015 மே 21 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தனியான அலுவலகம் பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனால் புதன்கிழமை (20) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினூடாக வெளிநாடு செல்வோரைச் சந்தித்தல், அவர்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்தல் மற்றும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இரகசியத் தன்மையினைப் பேணும் பொருட்டு தனியானதொரு அலுவலகம் தமக்கு அவசியமென ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரிடம் வேலைவாய்ப்பு பணியகத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவர்கள் கடந்த காலத்தில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலிருந்து தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்லும் ஆண்கள், பெண்கள் இருபாலாரும் பூர்த்தி செய்து கொள்ளவேண்டிய அடிப்படைத் தேவைப்பாடுகள், பின்பற்றவேண்டிய சட்ட வரையறைகள் என்பன தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தி வந்தனர்.
மேலும் வேலைவாய்ப்புப் பணியகத்தின் சார்பில் முகவர்களாகச் செயற்பட்டு அதன் பணிகளை மக்களுக்குத் தெளிவுபடுத்துபவர்களாகப் பணியாற்றிவருவதுடன் குறித்த பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாடு சென்றவர்களின் குடும்ப நலன்களை கண்காணித்து பிரதேச செயலாளரூடாக அமைச்சுக்கு அறிக்கையிடுபவர்களாகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில், கிராமசேவகர் பிரிவுகளுக்குமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களான ஜி.தயாபரன், கே.ரஞ்சித்குமார் மற்றும் கே.செல்வானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago