Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 22 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற தொழில்நுட்பக் கண்காட்சியின் இறுதி நிகழ்வில் தமிழில் தேசியகீதம் பாடப்பட்டமையால், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐந்து பேர் தலா ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன், எதிர்வரும் ஜுன் மாதம் 23ஆம் திகதிக்கு வழக்கு திகதியும் குறிக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகஸ்தரான பத்தக்குட்டி சுமன் தாக்கப்பட்டிருந்தார். இது தொடர்பில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று வியாழக்கிழமை ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்களில் இருவர் அடையாளம் காட்டப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார் மேற்படி சந்தேக நபர்களை கைதுசெய்து நேற்று வியாழக்கிழமை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது. இதன்போது, இரண்டு பெரும்பான்மையின மாணவர்கள் அடையாளம் காட்டப்பட்டனர்.
சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி எம்.ஐ.உவைஸுர் றஹ்மான் ஆஜரானார்.
சந்தேக நபர்கள் முகாமைத்துவப்பீட இறுதியாண்டு மாணவர்கள் என்பதனால், அவர்களை பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணி நீதிபதியை கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து, ஜுன் 23ஆம் திகதிக்கு வழக்கு திகதி குறிக்கப்பட்டதுடன், ஐந்து சந்தேக நபர்கள் தலா ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.
கண்காட்சியின் இறுதி நிகழ்வில் தமிழில் தேசியகீதம் ஒலிபரப்பப்பட்டதாகவும் இதன்போது, பெரும்பான்மையின மாணவர்களினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
எனினும், மீண்டும் சிங்களத்தில் தேசியகீதம் ஒலிபரப்பட்ட நிலையில் திடீரென பெரும்பான்மையின மாணவர்கள் சிலர் தன்னை தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவரான சுமன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
தாக்குதலுக்குள்ளான அலுவலர் படுகாயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago