Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 மே 25 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
சித்த மற்றும் ஆங்கில வைத்திய முறைகளில் உணவுப்பழக்க வழக்கத்தின் ஊடாக உயர் குருதியமுக்க வைத்திய முகாமைத்துவம் பற்றி விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது.
அறிவைப் பகிர்தல் எனும் தொனிப்பொருளில் இரண்டாவது முறையாக நடைபெற்ற இச்செயலமர்வில், ஆங்கில வைத்தி முறையில் கிழக்குப் பல்கலைக் கழக விஞ்ஞான சௌக்கிய பீடாதிபதி வைத்தியக் கலாநிதி சுந்தரேசன் மற்றும் சித்த வைத்தியத் முறையில் கிழக்குப் பல்கலைக் கழக திருமலை வளாகத்தின் சித்த மருத்துவ சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியக்கலாநிதி என். வர்ணகுலேந்திரன் ஆகியோர் விளக்கமளித்தனர்.
இவர்களுக்கான இரு விருதுகளையும் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சித்த மருத்துவ அமைச்சின் செயலாளர் கே. கருணாகரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வழங்கிக் கௌரவித்தார்.
அரச சித்த வைத்தியர்கள் சங்கம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சித்த மருத்தவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் வைத்தியக் கலாநிதி ஆர். சிறிதர் மற்றும் அரச சித்த வைத்தியர்கள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago