Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 26 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட ஈரளக்குளம் கிராம அலுவலர் பிரிவில் முதல் தடவையாக தற்காலிக தபால் விநியோகசேவை திங்கட்கிழமை (25) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த யுத்தத்தால்; மிகவும் பாதிக்கப்பட்டதாக ஈரளக்குளம் கிராம அலுவலர் பிரிவு காணப்படுகின்றது. இந்த நிலையில், இந்த கிராம அலுவலர் பிரிவில் பல்வேறுபட்ட அடிப்படை பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இந்தக் கிராம அலுவலர் பிரிவில் நான்கு பாடசாலைகள், கிராம அலுவலர் அலுவலகம், சுகாதார பரிசோதகர் அலுவலகம் ஆகியவை உள்ளன. இருப்பினும், அங்கு தபால் விநியோகசேவை இதுவரை காலமும் இல்லாதிருந்தது.
இந்த நிலையில், இந்தக் கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் மக்கள், கடந்தகாலத்தில் தங்களுக்கான கடிதங்களை உறவினர்கள் மற்றும் கிராம அலுவலர் ஊடாக பெற்றுவந்தனர். இதனால், பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கும் உள்ளாகியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
35 minute ago
46 minute ago
3 hours ago