Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2015 மே 27 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
அம்பாறை மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, பட்டய அறிவிப்பு, திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
ஆரம்ப காலத்தில், இவ் ஆலய உற்சவம் இடம்பெறும் வேளையில், பல்வேறு காரியங்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
அதாவது, வீடுகளில் மா இடித்தல், வெள்ளை கட்டுதல், தீட்டு உடையவர்களை ஆலயத்துக்கு அண்மையிலிருந்து விலக்கி வைத்தல், மஞ்சள் இடித்தல், பெண்கள் தலை விரிகோலமாக செல்வதை தவிர்த்தல்;, பொரித்தல், மங்களகரமான நிகழ்வுகளை வீடுகளில் நடத்துதல் போன்றவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இவ்விடயங்களை உற்சவம் இடம்பெறுவதற்கு முன்னர் கிராமம் முழுவதும் சென்று மக்களுக்கு அறிவிப்பர்.
எனவே, வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையினர் மாட்டு வண்டியில் கிராமம் முழுவதும் சென்று இவ்விடயத்தை அறிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago