Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 மே 27 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
இயற்கை விவசாயத்தில் இணைவோம் எனும் தொணிப் பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகம் செவ்வாய்க்கிழமை மாலை (26) மட்டக்களப்பு - களுதாவளை ஸ்ரீ முருகன் ஆலய முன்றலில் நடைபெற்றது.
விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.கனகசபை, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் உட்பட விவசாயத் திணைக்கள உத்தியோகஸ்தர்களும் விவசாயிகளும் கலந்துகொண்டனர்.
ஓக்ஸ்பாம் எனும் அரச சார்பற்ற அமைப்பின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இயற்கை விவசாயத்தில் இணைவோம் எனும் தொணிப் பொருளில் மட்டக்களப்பு நெய்தல் ஊடக தரிசம் எனும் அமைப்பு வீதி நாடகத்தை வழங்கியிருந்தது.
இதன்போது கலந்துகொண்ட விவசாயிகளுக்கு இயற்கை கிருமிநாசனிகள் மற்றும் உரவகைகளைப் பயன்படுத்தவதனால் ஏற்படும் நன்மைகள் தொடர்பாகவும் செயற்கை உரவகைகள் மற்றும் கிருமிநாசினிகள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் தொடர்பானதுமான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago