Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 மே 28 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சொந்தக் காணிகள் இல்லாமல் அரச காணிகளில் மிக நீண்டகாலமாக குடியிருந்து வந்த குடியிருப்பாளர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ்;, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காகிதநகர் கிராம சேவகர் பிரிவில் அல் மஜ்மாநகர் கிராம மக்களுக்கான காணி அனுமதிப்பத்திம் நேற்று புதன்கிழமை(27) பிற்பகல் வழங்கி வைக்கப்பட்டது.
ஓட்டமாவடி உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ். சில்மியா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் கிழக்க மாகாண சபை முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிதிகளாக வீதி அபிவிருத்தி காணி அமைச்சர் ஆரியபதி கலபதி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி திருச்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைத்தனர்.
இதன்போது, சுமார் 52 பேருக்கு அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
33 minute ago
44 minute ago
3 hours ago