2025 ஜூலை 05, சனிக்கிழமை

காணாமல் போனதாக கூறப்படும் இருவரும் பொலிஸாரால் கைது

Kogilavani   / 2015 மே 28 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, ஓட்டமாவடியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காணாமல் போனதாக கூறப்படும் இருவரையும் பொலிஸாரே கைதுசெய்துள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த  இருவர், படகுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக செவ்வாய்க்கிழமை, திருகோணமலை, புல்மோட்டை பிரதேசத்துக்கு சென்றுள்ளனர்.

இருவரதும் கையடக்க தொலைபேசிகள் செயலிழந்து காணப்பட்டமையால் இவர்கள்; காணாமல் போய்விட்டதாக உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையிலே மேற்படி இருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படகு இயந்திரங்கள் திருட்டு தொடர்பில் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .