2025 மே 17, சனிக்கிழமை

சிறுநீரகநோய் தொடர்பில் விழிப்புணர்வூட்டல்

Suganthini Ratnam   / 2015 மே 28 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி சுகாதார அலுவலகப் பிரிவிலுள்ள  பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு சிறுநீரக நோய் தொடர்பாக விழிப்புணர்வூட்டுதலும்  சிறுநீரக நோயுள்ளதா என்பதை பரிசோதிக்கும் நடவடிக்கையும்  காத்தான்குடி சுகாதார அலுவலகத்தினால் இன்று வியாழக்கிழமை  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனின் மேற்பார்வையில் காத்தான்குடி அல் ஹிறா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளில்  மாணவர்களுக்கு சிறுநீரக நோய் தொடர்பாக விழிப்புணர்வூட்டப்பட்டதுடன், பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இதில் காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.ஐ.எம்.றபீக், பொதுச் சுகாதார சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.றஹ்மத்துல்லாஹ், என்.கருணாகரன், திஸ்ஸ வீரசிங்க, ரி.மிதுன்ராஜ், கே.ஜெயசங்கர் மற்றும் தாதியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டில் சிறுநீரக நோயை கட்டுப்படுத்;தும் நோக்கில் சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார சேவைகள் திணைக்களம் என்பவற்றின் அறிவுறுத்தலுக்கும் ஆலோசனைக்கும் அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .