2025 மே 17, சனிக்கிழமை

'சுதந்திரமாக செயற்படமுடியாமையை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் வெளிக்காட்டியுள்ளது'

Suganthini Ratnam   / 2015 மே 28 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

பொதுத் தேர்தல் வருவதற்குரிய சந்தர்ப்பமுள்ள  நிலையில், தேர்தல் காலத்தில் கட்சிகள் சுதந்திரமாக செயற்படமுடியாது என்பதை இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் வெளிக்காட்டியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு மட்டக்களப்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மண்டூரில் சமூகசேவை உத்தியோகஸ்தரை பாதுகாப்பு நிறைந்த பிரதேசத்துக்குள் ஆயுததாரிகள் வந்து சுட்டுக் கொலை செய்துவிட்டு சுதந்திரமாக செல்வது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாக உள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து  ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்திருந்தோம்.  ஆனால், தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பை  சேர்ந்தவர்கள் கோரியதற்கு இணங்க அரசாங்கத்துக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கியுள்ளோம். அந்த ஒருவார காலத்துக்குள் குற்றவாளிகள் கைதுசெய்யப்படாவிட்டால் எமது போராட்டம் தொடரும்.

இந்த துப்பாக்கிசூட்டு சம்பவம் தொடர்பிலான உண்மையான காரணங்கள் வெளிக்கொணரும்போது மக்கள் மத்திலுள்ள அச்சம் நீங்கும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .