2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மாவட்ட பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்

George   / 2015 மே 29 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.டி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல், நேற்று வியாழக்கிழமை(28) மாலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
 
மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், கிழக்குப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் சன்ட்ரா நிமால் வாகிஸ்ட, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க, மேலதிக மாவட்டச் செயலாளர் எஸ்.கிரிதரன்,  மேலதிக மாவட்டச் செயலாளர் - காணி திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் ஆகியோரும் பங்கு கொண்டனர்.
 
பிரதேச செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள். பிரதேச சபைகளின் செயலாளர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இக் கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வாரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், அதனால் ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை, சட்ட விரோத நடவடிக்கைகள், அனுமதியின்றி மணல் அகழ்தல், சட்டவிரோதமான முறையில் மரம் வெட்டுதல், வீதி விபத்துக்கள், அவற்றால் ஏற்படும் பிரச்சினைகள், பாதுகாப்பான நடைமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
 
அதே நேரம், பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகள், ஆடுகளின் தொல்லைகள், மாவட்டத்தில் அதிகரித்துவரும் தற்கொலைகள், யானை பிரச்சினைகள், மட்டக்களப்பு நகரப்பகுதிகளிலுள்ள பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .