2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

விவசாய போதனாசிரியர்களுடன் கலந்துரையாடல்

George   / 2015 மே 29 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.டி.யுதாஜித்

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட விவசாயப் போதனாசிரியர்களுடனான கலந்துரையாடல், நேற்று வியாழக்கிழமை(28) பகல் திருகோணமலை மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் விவசாயத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் குகதாஸன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதமஅதிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் கலந்துகொண்டார்.

அமைச்சின் செயலாளர் டி.இ.சிவநாதன், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் கே.தங்கவேல், மாகாண விவசாயப் பணிப்பாளர் எச்.ஏ.குசைன், திருகோணமலை மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய முகாமையாளர் எம்.எம்.நிஹாஸ், மாவட்டத்தின் பல்வேறு பிரதேச விவசாயப் போதனாசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது திருகோணமலை மாவட்டத்தின் விவசாய நிலைமைகள், பயிர்ச் செய்கைகள், மற்றும் பிரதேசத்தின் வளங்கள், வளங்களைப் பன்படுத்தும் விதங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் போதனாசிரியர்களின் குறைநிறைகள், அவர்களின் செயற்பாடுகள் பற்றியும் கலந்துiராயடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .