Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 மே 30 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மகப்பேறும் பெண் நோயியலும் எனும் தலைப்பிலான கருத்தரங்கொன்று வெள்ளிக்கிழமை (29) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூகம் (எஸ்.ஆர்.ரி.) எனும் அமைப்பினால்; இந்த கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த அமைப்பின் தலைவர் டாக்டர் எம்.ஏ.ஹாதி தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், மகப்பேறும் பெண் நோயியலும் எனும் தலைப்பில் பெண்ணியல் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.எச்.எம்.சிறாஜ் உரையாற்றினார்.
சுகமான மகப்பேறு மற்றும் மகப்பேற்று காலத்தில் கர்ப்பிணித்தாய்மார் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள், கர்ப்பிணித்தாய்மாருக்கு ஏற்படும் நோய்களின் போது அவர்கள் பெறவேண்டிய சிகிச்சை முறைகள், கர்ப்பிணித்தாய்மாருக்கு கர்ப்பம் தரித்ததன் பின்னர் ஏற்படும் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் அதற்கான சிகிச்சைகள் பற்றியும் இதன் போது விளக்கமளிக்கப்பட்டது.
இந்த கருத்தரங்கில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் மற்றும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர், டாக்டர் அலிமா றஹ்மான், டாக்டர் எம்.எப்.எம்.சியாம் உட்பட வைத்தியர்கள் காத்தான்குடி ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூகம் (எஸ்.ஆர்.ரி.) எனும் அமைப்பின் அங்கத்தவர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
50 minute ago
1 hours ago