2025 மே 17, சனிக்கிழமை

'பாலர் பாடசாலையில் கற்பிப்போருக்கு கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுக்கப்படும்'

Gavitha   / 2015 மே 30 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்தில் பாலர் கல்வி தொடர்பான பயிற்சியை முடித்துவிட்டு பாலர் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியைகளுக்கு கொடுப்பனவுகள் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

எனது ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் கல்வித்துறைக்கு தேவைப்படும் சகலவித தேவைகளையும் நிறைவேற்றிக்கொடுப்பேன் என்றும் பயிற்சி முடித்த பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு  கொடுப்பனவுகள் வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்வேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் டிப்ளோமா பயிற்சி முடித்த பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்வில், உரையாற்றும் போதே அவர் மேற்கணடவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பயிற்சியை முடித்த 114 பாலர் பாடசாலை ஆசிரியைகள் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .