2025 மே 17, சனிக்கிழமை

இயற்கை முறையிலான வீட்டுத்தோட்டப் பயிற்சி

Princiya Dixci   / 2015 மே 31 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் விவசாய விரிவாக்கல் உத்தியோகஸ்தர் பிரிவில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை முறையிலமைந்த வீட்டுத்தோட்டச் செயன்முறைக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக விவசாயப் போதனாசிரியர் எம்.எச். முர்ஷிதா ஷிரீன், ஞாயிற்றுக்கிழமை (31) தெரிவித்தார்.

வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் வீட்டுத்தோட்டத்துக்கான உள்ளீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு இயற்கை முறையிலமைந்த வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான பயிற்சிகள் கிரமமாக வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

கிராம மக்கள் குறைந்தபட்சம் தமது நாளாந்த உணவுத் தேவைக்கான மரக்கறி உற்பத்திகளை நஞ்சற்றதாக தாமே உற்பத்தி செய்து நோயற்று ஆரோக்கியமாக வாழத் தூண்டுவதே இந்த இயற்கை விவசாய செயன்முறைப் பயிற்சிகளின் நோக்கம் என்று அவர் பயிற்சியின் போது தெரிவித்தார்.

ஏறாவூர் மீராகேணிக் கிராமத்தில் இன்று இடம்பெற்ற பயிற்சியில் இயற்கை மண் வளமாக்கிகள், இயற்கைப் பீடை நாசினிகள் போன்றவற்றைப் பவிப்பது குறித்து செயன்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த செயன்முறைப் பயிற்சியில் முஸ்லிம் எயிட் ஸ்ரீ லங்கா கள நிலையத்தின் உணவு பாதுகாப்பு உத்தியோகஸ்தர் எம். எஸ். அஹமட் டில்ஸாத், பிரதேச விவசாயப் போதனாசிரியர் எம்.எச். முர்ஷிதா ஷிரீன் உட்பட பயனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .