2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

நாளொன்றுக்கு 60 - 70 மெட்றிக்தொன் கழிவு சேகரிப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 05 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு நகரில் நாளொன்றுக்கு 60 முதல் 70 மெற்றிக்தொன் கழிவுகளை மாநகரசபை சேகரிப்பதாக  மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரஞ்சினி பாஸ்கரன் தெரிவித்தார்.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் மாவட்ட சுற்றாடல் அபிவிருத்தி அதிகாரசபை என்பன இணைந்து ஏற்பாடு செய்த சுற்றுப்புறச் சூழலை பரிசோதிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (05) மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 'இலங்கையில் நாளாந்தம் கொட்டப்படும் 7,500 மெற்றிக்தொன் கழிவுகளில் 3,500 மெற்றிக்தொன் கழிவுகள் உள்ளூராட்சி நிறுவனங்களால் சேகரிக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு நகரில் நாளொன்றுக்கு 60 முதல் 70 மெட்றிக் தொன் கழிவுகளை மாநகர சபை சேகரிப்பதாகவும் தங்களுக்கு மக்களின் பங்களிப்பு பூரணமாக கிடைப்பதில்லை. இந்நிலையில் மட்டக்களப்பு மாநகரை பிளாஸ்டிக் அற்ற நகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் மாநகர சபை ஈடுபட்டுள்ளமைக்கு அதன் நிர்வாகத்தைப் பாராட்டுகின்றேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .