2025 மே 16, வெள்ளிக்கிழமை

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயம்

Thipaan   / 2015 ஜூன் 06 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர்- புன்னக்குடா வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (05) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி  படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏறாவூர் –ஆர்சி வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான அப்துல் றஸ்ஸாக் என்பவரே விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

புன்னக்குடா வீதியில் ஜிப்ரி தைக்கா பள்ளிவாயலுக்கருகிலுள்ள வீதி வளைவில் இரண்டு முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.

இதில் ஒரு வண்டி முழுமையாகச் சேதமடைந்து  சாரதி படுகாயமடைந்த நிலையில், மற்றைய வண்டி  தப்பிச் சென்றுள்ளது.

படுகாயமடைந்த நபர், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தப்பிச்சென்ற முச்சக்கர வண்டியின் இலக்கம் பொது மக்களினால் ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .