2025 மே 16, வெள்ளிக்கிழமை

வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு

Thipaan   / 2015 ஜூன் 06 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட் மாங்காடு கடற்கரையில் இன்று சனிக்கிழமை (06) காலை 08.30 மணியளவில் வயோதிப பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கரையெதுங்கிய சடலம் களுதாவளை கிராமத்தை சேந்த சின்னத்தம்பி பரஞ்சோதி (வயது63) என கணவரால் அடையாளம் காணப்பட்டது.  

குறித்த பெண், நேற்று வெள்ளிக்கிழமை (05) இரவில் இருந்து காணமற்போயிருந்ததாகவும் அவரது குடும்பத்தினரால் அப் பெண் தேடப்பட்டு வந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மரணம்  தொடர்பான மேலதிக விசாரணை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .