Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 08 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கடந்த அரசாங்கத்தினால் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை புதிய அரசாங்கம் குறைத்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி அல் ஹிறா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை இன்று திங்கட்கிழமை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'புதிய அரசாங்கம் இவ்வருடத்தில் குறைந்த நிதியிலான அபிவிருத்தி வேலைகளை மாத்திரமே மேற்கொண்டுள்ளது.
ஆயிரம் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு இந்த நாடு முழுவதும் அபிவிருத்தி அடைந்து 2016ஆம் ஆண்டு முடிவடைகின்றபோது, இந்த வேலைத்திட்டம் முடிவடைய வேண்டும் என்று கடந்த அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
மேலும், இந்த ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தில் ஒரு பாடசாலைக்கு ஆறு கோடி ரூபாய் செலவு செய்யும் வேலைத்திட்டமாகவும் இந்த திட்டமிருந்தது. ஆனால், ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை இந்த புதிய அரசாங்கம் குறைத்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் எங்களுடைய ஆட்சி நிர்வாகம் வருகின்றபோது, கடந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தினை முழுமையாக மேற்கொள்வோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago