Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 24 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.நிரோஷினி
கிழக்கு மாகாணத்தில் புறக்கணிக்கப்பட்ட 110 தொண்டர் ஆசிரியர்களுக்கும் கூடிய விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதுடன், இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலாந்தாலோசித்து வருவதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் நியமனம்; தொடர்பில் வினவியபோதே, தமிழ்மிரருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (23) அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'கிழக்கு மாகாணத்தில் நிலவும் 1,990 ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் தொடர்பான விவரத்தை இன்னும் இரு வாரங்களில் ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன்.
கடந்த ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கண்டும் காணாது போலிருந்தார். இது சிறுபான்மைச் சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகமாகும். அவர் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நாம் வழங்கப்படவுள்ள தொண்டர் ஆசிரியர் நியமனங்கள் அவரது ஆட்சிக் காலத்தில் புறக்கணிக்கப்பட்ட 110 பேருக்கேயாகும்' என்றார்.
'கிழக்கில் ஆசிரியர் பதவி வெற்றிடம் எதுவும் இல்லை என்று சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறிவருகின்றார். இதில் எந்தளவுக்கு உண்மையுள்ளது என்பதை இன்னும் 2 வாரங்களில் ஆதாரத்துடன் வெளிப்படுத்துவோம்' என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
7 hours ago
15 May 2025