2025 மே 16, வெள்ளிக்கிழமை

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Freelancer   / 2025 மே 16 , மு.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் நேற்று இந்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சண்டையின்போது, பயங்கரவாதிகள் ஒரு கொட்டகையில் பதுங்கியிருக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

ஜம்மு - காஷ்மீரின் அவந்திபோராவில் உள்ள டிராலின் நாடர் பகுதியில் நேற்று முன்தினம் இந்திய இராணுவம், ஜம்மு - காஷ்மீர் பொலிஸார் மற்றும் மத்திய ரிசர்வ் பொலிஸ் படை இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையைத் தொடங்கின. இந்த நடவடிக்கையில் மூன்று தீவிர பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இது குறித்து வெளியாகியுள்ள காணொளியில், பயங்கரவாதிகளில் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் ஒரு கொன்கிரீட் தூணின் பின்னால் பதுங்கியிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தொலைவில் இருந்து படம்பிடிக்கப்பட்ட மற்றொரு காணொளியில், பயங்கரவாதிகள் உடைந்த கொட்டகைக்குள் பதுங்கியிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .