Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 26 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஏறாவூர்ப்பற்று கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலையொன்றுக்கு புதிய அதிபர் நியமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள சர்ச்சையால் இன்று வெள்ளிக்கிழமை மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்லவில்லை.
அதேவேளை பெற்றோரும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரும் மட்டக்களப்பு கல்வி அலுவலகத்திற்குச் சென்று பிள்ளைகள் வகுப்புக்களுக்குச் செல்லாதது குறித்து வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
இதனையடுத்து உடனடியாக குறித்த பாடசாலைக்கு விஜயம் செய்த மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர், மாணவர்கள் பாடசாலை வகுப்புக்களுக்கு சமுகமளிக்காமை குறித்து விசாரித்தார்.
இதுவரை பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றுபவரை தொடர்ந்து அப்பாடசாலையிலேயே கடமையாற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் புதிதாக இடமாற்றம் பெற்று வந்த அதிபர் தங்களது பாடசாலைக்குத் தேவையில்லை எனவும் பெற்றோரும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரும் கல்விப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.
1990ஆம் ஆண்டிலிருந்து பாதிக்கப்ட்டு வந்துள்ள இப்பாடசாலையை தற்போதுள்ள அதிபர் முன்னேற்றியுள்ளார்.
பாடசாலையின் சிறப்பான நிர்வாகம், மாணவர்களின் ஒழுக்கம், கல்வி அடைவுகள் என தற்போதைய அதிபரின் நிர்வாகம் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.
இதனைக் குழப்ப வேண்டாம், பாடசாலை முன்னேற்றத்தைத் தடுக்க வேண்டாம் என அவர்கள் கோரி நின்றனர்.
தமது கோரிக்கைக் கடிதம் ஒன்றையும் பெற்றோர் கல்விப் பணிப்பாளரிடம் ஒப்படைத்தனர். தமது கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என பெற்றோர் கல்விப் பணிப்பாளரிடம் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago